நடிகை சாயிஷா நடிகர் ஆர்யாவை காதலித்து மணந்தார். டெடி படத்தில் மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கின்ற னர். கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சாயிஷா அடிக்கடி நடனம் ஆடி வீடியோ எடுத்து நெட்டில் வெளி யிடுகிறார்.

மேற்கத்திய இசை விழாவில் விருது பெற்ற டிஜே ஸ்னேக்ஸின் டக்கி டக்கி பாடலுக்கு உடலை பாம்பாக வளைத்து நெளித்து அதிரடி நடனம் ஆடும் வீடியோவை நேற்று சாயிஷா வெளியிட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் ஏகமாக லைக் கொடுத்து பாராட்டியிருக் கிறார்கள்.
நடிகர் ஆர்யாவும் அடுத்த நடிக்க விருக்கும் பா.ரஞ்சித் படத்திற்காக உடலை சிக்ஸ்பேக் தோற்றத்துக்கு மாற்றி படப்பிடிப்புக்காக காத்திருக்கி றார்.
Patrikai.com official YouTube Channel