சென்னை: சென்னை பெருமநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல்நிலையங்களுக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. இதையொட்டி, காவல்நிலையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் காவல்நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பெண்கள், சிறுவர் – சிறுமியர்களை எக்காரணத்திற்காகவும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரக்கூடாது எனவும், முக்கிய வழக்குகளில் கைதாகும் நபர்கள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரிடம் உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]