நாய், பூணை இறைச்சி சாப்பிட தைவானில் தடை

Must read

விலங்குகள் நலனை கருத்தில் கொண்டு நாய், பூணை இறைச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தைவான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிய நாடுகளில் முதல் நாடாக தைவான் இந்த அறிவிப்பை வெளியிட்டருப்பது குறிப்பிடத்தக்கது.

நாய், பூணை இறைச்சியை வாங்கினாலோ, சாப்பிட்டாலோ 8 ஆயிரத்து 200 டாலர் அபராதம் விதக்கப்படும் கடந்த 1998ம் ஆண்டு முதல் நாய், பூணை இறைச்சி கூடங்கள் செயல்படுவது சட்டவிரோதம் என்று அறிவித்திருந்தது. எனினும் சட்டவிரோதமாக இத்தகைய இறைச்சி கூடங்கள் ரகசியமாக ª சயல்பட்டு வ ந்தது.

தற்போது இதற்கான அபராத தொகையை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. நாய், பூணைக்கு வேண் டுமென்றே தீங்கு விளைவித்தால் 65 ஆயிரம் டாலர் அபராதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்து. இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதக்கப்படும். முன்னதாக இந்த குற்றத்திற்கு ஒராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் சட்டம் அமலில் இருந்தது.

நாய், பூணை இறைச்சி சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியிலும், விலங்குகள் நல ஆர்வர்கள் மத்தியிலும் கடந்த சில ஆண்டுகளாக கவலையை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் நடக்கும் நாய் கறி திருவிழா மூலம் இது மேலும் வெளிச்சத்திற்கு வந்தது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தெற்கு சீனாவின் யுலின் பகுதியில் இந்த திருவிழாவுக்காக 10 நாட்களில் 10 ஆயிரம் நாய்கள் கொல்லப்படும். இந்த விழாவுக்கு தடை விதிக்க கோரி மில்லியன் கணக்கான மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி மனு அளித்தனர்.

இந்நிலையில் பூணை, நாய்கள் உணவுக்காக கொல்லப்படுதவதற்கு தைவான் தடை விதித்தருப்பது நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஆனால் சீனா, தென் கொரியா, பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளின் இது சட்டப்பூர்வமாக உள்ளது. ‘‘தைவானின் இந்த நடவடிக்கை மூலம் கலாச்சாரம் என்ற பெயரில் விலங் குகளை கொடூரமாக கொன்று சாப் பிடுவதை தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று சர்வதேச விலங்குகள் பாதுகாப்பக இயக்குனர் அதாம் பராஸ்கோண்டாலா தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் ஆண்டுதோறும் 30 மில்லியன் நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகிறது. பெரும்பாலான சீனர்கள் நாய் இறைச்சி சாப்பிடுவது கிடையாது. 2015ம் ஆண்டில் கணக்கெடுப்பின் படி சீனாவில் உள்ள பெய்ஜிங், சாங்ஹாய் போன்ற பெரு நகரங்களில் இரண்டு ஆண்டுகளில் 25 சதவீத்திற்கும் குறைவானவர்கள் நாய் இறைச்சி சாப்பிட்டுள்ளனர்.

‘‘தென் கொரியாவில் நாய் இறைச்சி சாப்பிடுவது இளைஞர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. அமெரி க்காவில் ஆண்டுதோறும் 2 மில்லியன் நாய்கள் கொல்லப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 80 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு வந்த சியோல் மரோன் மார்கெட்டில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தைவானின் முடிவு சீனாவிலும், தென் கொரியாவிலும் தீர்வை ஏற்படுத்த அழுத்தமாக இருக்கும்’’ என்று பராஸ்கோண்டாலா தெரிவித்தார்.

More articles

Latest article