சென்னை:  சென்னை மாநக மேயர் பிரியாவுக்கு சமமாக,  ‘டஃப்’ கொடுத்து வந்த டபேதார் மாதவி அதிரடியாக  இட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளார். அவர் பணிக்கு சரியாக வரவில்லை என காரணம் கூறி அவரை சென்னை மாநகராட்சி பணியிட மாற்றம் செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக மாதவி என்பவர்  முதன்முறையக நியமிக்கப்பட்டார். அதாவது,  சென்னை மாநகராட்சி மேயராக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்ட போது முதல் பெண் தபேதாரராக மாதவி என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

மேயருக்கு முன்னே செங்கோலை ஏந்தியும் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவதும் தபேதாரின் பணி.  இந்த பணியில் ஈடுபட்டு வந்த மாதவி,  மாநகராட்சி மேயர் பிரியாவுடன், மாதவி அரசு விழாக்களில் பங்கேற்பது வழக்கம். மேயரை மிஞ்சும் வகையில் உடை அணிந்து மிடுக்காக கண்கள் மற்றும் உதடுகளில் மை தீட்டி அழகாக வலம் வந்தார்.  இது சர்ச்சையானது.

இதைத்தொடர்ந்து,  டபேதார்  மாதவி உதட்டில் லிப்ஸ்டிக் பூசக்கூடாது, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது  உள்பட பல அறிவுரைகள்  வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த மாதம் நடைபெற்ற அதிகாரபூர்வ நிகழ்வின் போது உதட்டுச்சாயம் அணியக் கூடாது என்ற அறிவுறுத்தல்களுக்கு அவர் கீழ்ப்படியாமல்  தன்னை மேலும் அழகூட்டி, லிப்ஸ்டிக் போட்டிருந்ததாக  என்று கூறப்படுகிறது. இதை மேயர் பிரியா கண்டித்தாக  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  முதல் பெண் டபேதார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்,. உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக மணலி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  பணியில் அலட்சியம், பணிக்கு நேரத்திற்கு வரவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டால் மாதவி பணியிட மாற்றம் எனத் தகவல். சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் எஸ்.பி. மாதவி  தற்போது மணலி மண்டல அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

முன்னதாக அவருக்கு மாநகராட்சி சார்பில் மெமோ வழங்கப்பட்டதாகவும், கடந்த ஆகஸ்ட் ஆறாம் தேதி மேயர் அலுவலகத்தின் அலுவலர் சிவசங்கர் மூலமாக அலுவலகத்திற்கு நேரம் தவறி வந்ததாகவும், கடமை தவறியதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவை மீறியதாகவும் மெமோ அனுப்பப்பட்டு இருக்கிறது.  இதற்கு அவர் பதில்அளித்திருந்த நிலையில், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மேயர் பிரியா அலுவலகம்,   டபேதார் மாதவி இடமாற்றத்துக்கும் லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை  என்றும்,  உரிய நேரத்தில் பணிக்கு வராததுஅலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டபேதார் மாதவி, ”தான் அலுவலகத்திற்கு நேரம் தவறி வந்ததற்கும், உயர் அதிகாரிகளின் உத்தரவை மீதிதாக கூறப்படுவதற்குமான ஆதாரங்களை காண்பிக்க முடியுமா?

மெமோ அனுப்பப்பட்ட தேதியான ஆகஸ்ட் 6ஆம் தேதி அரை மணி நேரம் தாமதமாக அதாவது 10:30 மணி அளவில் அலுவலகத்திற்கு வந்தேன். காலில் சிறிய காயம் இருப்பதால் தான் தாமதம் ஏற்பட்டது.

” எனது உதட்டு சாயத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மேயர் கூறிய உத்தரவை மீறியது தான் மெமோவில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், மற்ற மாநகராட்சியின் துறைகளுக்கு தான் செல்லக்கூடாது என மெமோவில் குறிப்பிட்டிருந்ததாகவும் மாநகராட்சியின் எந்த ஒரு அரசாணையிலும் ஒரு துறையில் பணிபுரியும் ஊழியர் மாற்றுத் துறைக்கு செல்லக்கூடாது என குறிப்பிடப்படவில்லை என்றும்,  லிப்ஸ்டிக் போடாதே என கூறியதை மீறியதுதான் தன் மீது ஆன குற்றமா? என தபேதார் மாதவி மெமோ விற்கு விளக்கம் அளித்து இருந்தார்.  இந்தவிவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.