
பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கம் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 2) ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் பிரதான கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்து வருகிறார்.
முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இந்தப் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் யோகி பாபு.
[youtube-feed feed=1]