டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி 7 ரன்களுக்கு ஆலவுட் ஆனது.
டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இடம்பெற ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் தகுதிச் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
குரூப் சி பிரிவில் இடம்பெற்ற நைஜீரியா – ஐவரி கோஸ்ட் இடையிலான இந்த போட்டியில் முதலில் விளையாடிய நைஜீரியா 4 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ஐவரி கோஸ்ட் 7.3 ஓவரில் 7 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இது ஆண்கள் T20I இல் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோராகும், 2024ல் மங்கோலியா அணியும் 2023ல் ஐல் ஆஃப் மேன் அணியும் 10 ரன்னில் ஆலவுட் ஆனதே இதற்கு முன் சாதனையாக இருந்தது.
264 ரன் வித்தியாசத்தில் நைஜீரியா அணி வெற்றிபெற்றதை அடுத்து டி20 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணி என்ற பெருமையை நைஜீரியா ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த வெற்றியின் மூலம் தகுதிச் சுற்று புள்ளிபட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.