சென்னை அ.மு.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் டி.டி.வி.தினகரன். இவர் குடும்பத்துடன் அடையாறு பகுதியில் வசித்து வருகிறார். இன்று சென்னையில் முகாமிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், டி.டி.வி.தினகரன் தரப்பில், வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அ.மு.மு.க கட்சியினர் மத்தியில் கலக்கம் நிலவி வருகிறது.