சென்னை: தவெகவுடன் கூட்டணி அமைக்க ஆசைப்பட்ட  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் செல்வம், தவெக தலைவர் விஜய் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பணிகளில்  திவிரம் காட்டி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது.

இதற்கிடையில்,  திமுக காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரப்பகிர்வு குறித்து சிலர் பேசிவந்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.  ஆனால், அதிகாரப்பகிர்வு கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக கூறி விட்டார். இதையடுத்து,  திமுக காங்கிரஸ் கட்சி கூட்டணி உறுதியாகி தொகுதி பங்கீடும் செய்யப்பட்டு விட்டது. அதன்படி,   காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தன்னை சந்தித்ததாக த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜுனா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டி.செல்வம் அப்பதவியில் இருந்து நேற்று இடைநீக்கம் செய்து கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட டி.செல்வம் விஜய் முன்னிலையில்  மார்ச் 26ந்தேதி  தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.

[youtube-feed feed=1]