பா.ஜ.க.வுக்கு பயப்படுகிறாரா டி.ஆர்.?

நேற்று (பிப்ரவரி 3) பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்தை திறந்து வைத்து, தனது இலட்சிய திராவிட முன்னேற்ற கழக கட்சியின் மாவட்ட செயலாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வழக்கம்போல தி.மு.க.வை மட்டும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
மேலும் மறைந்த கருணாநிதியையும் மறைமுகமாக விமர்சித்தார்.
“பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தை அவருக்கு பின்னால் வந்தவர்கள் காப்பாற்றவில்லை. அண்ணா தன் குடும்பத்திற்காக சொத்து சேர்க்கவில்லை. அவர் தன் குடும்பத்தை மட்டுமே வாழ வைக்கவில்லை. தனது குடும்பத்துக்கு கோடி கோடியாய் சொத்து சேர்க்கவில்லை.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தனக்கு வாரிசு இல்லை என்றாலும் தனது சொத்துக்களை வாய் பேசாத காதுகேட்காத குழந்தைகளுக்கு எழுதிச் சென்றாரே… ஒரு காலத்தில் அவரைக்கூட – அவர் ஆட்சியில் இருந்தபோதே – எதிர்த்தவன் நான். அவர் ஆண்டபோது அவரை நான் பார்த்த கோணமே வேறு” என்று டி.ஆர். பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொங்கல் பண்டிகையின் போது, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் எல்லாம் மூடப்பட்டன. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவே இல்லை. என்ன கொள்கை இது? ஒமிக்ரான் பரவி விட்டது. தமிழ்நாட்டில் ஏழைகள் தவிக்கிறார்கள். வேலை இல்லை.
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் என்று சொன்னவுடன், தமிழ்நாட்டில் எல்லாம் திறக்கப்பட்டது. அப்படியானால் கொரோனா தமிழ்நாட்டை ஓடிவிட்டதா.” என்று தி.மு.க. அரசையும் விமர்சித்தார் டி.ஆர்.
தவிர, “ நான் தி.மு.க-வின் முன்னாள் கொள்கைப் பரப்பு செயலாளரா இருந்தவன். உள்ளாட்சித் தேர்தல்ல ஒரு வார்டு செயலாளருக்கு போட்டியிட ஒன்றரை கோடி ரூபாய் வைக்க வேண்டுமாம். இதெல்லாம் என் காதுக்கே இதெல்லாம் வருகிறது. இப்படிப்பட்டவர்கள் வெற்றி பெற்றால், மக்கள் பணத்தைத்தானே கொள்ளையடிப்பார்கள்?
பொங்கல் பரிசு பொருட்கள் தரமில்லை. பணம் தரவே இல்லை.
நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என்றார்கள்… ஆனால் செய்ய வில்லையே” என வரிசையாக தி.மு.க.வை, தற்போதைய திமுக அரசை டி.ஆர். விமர்சித்தார்.
அவரது பேச்சு குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“ஒன்றிய பா.ஜ.க. அரசு சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. வட இந்திய ரயில்வே பணிகளுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக ரயில்வே பணிகளுக்கு வெறும் 59 கோடி ரூபாய்தான் ஒதுக்கி இருக்கிறது பாஜக அரசு. தாக்கல் செய்திருக்கிறது.
தவிர விமான நிறுவனம் முதல் பல்வேறு அரசுத்துறைகள் தனியாருக்கு விற்படுவதை அறிவித்திருக்கிறார்கள். வைரத்துக்கு வரி குறைப்பு, குடைக்கு வரி விதிப்பு என மக்கள் தேவையை மனதில் கொள்ளாமல் பட்ஜெட் இருக்கிறது.
இவற்றை டி.ஆர். கண்டுகொள்ளவில்லை.
தவிர நீட் தேர்வை ரத்து செய்ய, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றின. அதை ஒன்றிய பாஜக அரசு பொருட்படுத்தவே இல்லை. தவிர தனது பிரதிநிதியான ஆளுநர் மூலம் மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கிறது. இது குறித்தும் டி.ஆர். விமர்சிக்கவில்லை.
ஆனால் தி.மு.க.வை மட்டும் கடுமையாக தாக்கி பேசுகிறார்.
அதே நேரம், “தற்போது தமிழக பாஜகவில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து அந்த கட்சியில் நீடித்தால் தமிழ் நாட்டில் தாமரை மலரவே மலராது.” என அக்கட்சி நலனுக்காக பேசுகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது பாஜக மீதான அவரது பிடிப்பு தெரிகிறது.
மேலும் “இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழ தமிழர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். உணவுக்கும் குடி தண்ணீருக்கும் பிரச்சனையாக உள்ளது. பிரதமர் மோடி ஈழ தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களை காப்பாற்ற வேண்டும்” என்று சாதாரணாக வேண்டுகோள் வைக்கிறாரே தவிர, அழுத்தம் திருத்தமாகச் சொல்லவில்லை.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது தாக்குவது தொடர்கிறது. இது குறித்து இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் டி.ஆர். கண்டுகொள்ளவில்லை.
டி.ஆரும், பாஜகவின் பி.டீம் ஆகிவிட்டாா் என்பதையே இது காட்டுகிறது” என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது.