மும்பை

க்டோபர் மாதம் 17 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14 வரை அமீரகம் மற்றும் ஓமனில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.

2021ஆம் ஆண்டுக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது.    ஆயினும் இந்த தொடரை நடத்தும் ஹோஸ்ட் அணியாக இந்தியா களம் இறங்குகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபி மற்றும் ஷார்ஜா மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. இதைப் போல் ஓமனில் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.

இத் தொடரின் முதற்கட்டமாகத் தகுதி சுற்று 8 அணிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்றில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா,  ஓமன் மற்றும் பப்புவா நியூ கினி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கின்ற அணிகள் தொடரில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள 8 அணிகளுடன் சேர்ந்து சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன.

இந்த தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது. பல அணிகள் பயோ செக்யூர் முறையில் பங்கேற்று விளையாடும் தொடரை ஏற்கனவே அமீரகம் நடத்தியுள்ள காரணத்தினால் இந்த முடிவை ஐ சி சி எடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாமல் போனதற்காக ஐசிசி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.