சிரியாமீது, ஈரானிலிருந்து சென்று குண்டுவீசிய ரஷ்ய விமானங்கள்!

Must read

ஈரான்:
சிரிய நாட்டு போராளிகள் மீது ரஷியப்படை விமானங்கள் ஈரான் ராணுவ தளத்திலிருந்து சென்று குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின.
சிரிய நாட்டு  போராளிகளை ஒடுக்குவதற்கும்,  ஈரானின்  தாக்குதலை விரிவுப்படுத்தும் விதமாக ரஷ்யா, ஈரானுக்கு ஏற்கனவே போர் விமானங்களை வழங்கியது.  ரஷ்ய படைகள் ஈரானிலிருந்து தாக்குவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
2russia
இதுகுறித்து, ரஷிய பாதுகாப்புதுறை அதிகாரி கூறியிருப்பதாவது:  சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஐ.எஸ் மற்றும் (அலப்போ, இட்லிப் மற்றும் ஷோர் அல் டேய்ர் மாகாணங்களில் பதுங்கியிருக்கும்) நுஸ்ரா ப்ரான்ட் போராளிகளை குறிவைத்து நடத்தப்பட்டது என்றார்.  ஈரானின் ஹமதன் விமான தளத்திலிருந்து Tupolev-22M3  Sukhoi-34 போர் விமானங்கள் தாக்குதலில்
ஈடு்படுத்தபட்டுள்ளது” என்றார்.
தாக்குதல் நடத்தும் வீரர்களை பாதுகாக்க சிரியாவின் லதிவிகா மாகாணத்திலுள்ள ரஷ்யா விமான தளத்தில் போர்வீரர்கள் முகாமிட்டு உள்ளதாகவும் கூறினர்.
         இதுகுறித்து ரஷ்யாவின் ரோஸி 24 சேனல், ஈரானில் தரையிறங்கிய ரஷிய விமானங்களின் படத்தை வெளியிட்டது. ரஷிய விமானங்கள்   ஈரான்  இராணுவ தளத்தை பயன்படுத்துவதனால், விமானங்கள் ரஷ்யாவிலிருந்து பறந்து வரும் நேரத்தை 60 சதவிகிதம் குறைப்பதாகவும் , தாக்குதல் 40 சதவீதம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹமதன் விமான நிலையம்  ஈரானின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. ஈராக் எல்லையை கடந்தே ரஷ்யா விமானங்கள் சிரியாவில் தாக்குதல் நடத்துகின்றன.
      ரஷ்யாவின்  இந்த செயல் மத்திய கிழக்கு நாடுகளில் தன் ஆதிக்கத்தையும் பங்கையும் அதிகப்படுத்துவதற்காக என தெளிவாகிறது என ரஷ்ய ஊடங்கங்கள் கூறுகின்றன.
      ஈரான் மற்றும் ஈராக்கிடம் அவைகளின் எல்லையான காஸ்பியன் கடலிலிருந்து சிரியா மீது ஏவுகணைகளை வீச  அனுமதி கேட்டுள்ளதாக கூறுகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article