சிட்னி: மழையால் தடைபட்ட முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது செஷன் நடைபெற்றுவரும் நிலையில், 31 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது ஆஸ்திரேலியா.

சிட்னியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஏற்கனவே எதிர்பார்த்தபடி, துவக்க வீரர்களாக புதுமுக வீரர் வில் புகோவ்ஸ்கி மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.

ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னரை, 5 ரன்னுக்கு திருப்பி அனுப்பினார் இந்தியாவின் முகமது சிராஜ். தற்போது வில் புகோவ்ஸ்கியும், லபுஷேனும் ஆடி வருகிறார். மழை குறுக்கிட்ட நிலையில், ஆட்டம் மீண்டும் துவங்கியுள்ளது.

மழை மேலும் குறுக்கிடும் நிலையில், இன்றைய முதல் நாள் ஆட்டத்தில், விரும்பிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.