பெர்ன், சுவிட்சர்லாந்து,
கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள சுவிடர்லாந்து நினைக்க முடியாத ஏழ்மை நிலையைச் சந்திக்கும் என ஒரு பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று பல ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதில் சுவிட்சர்லாந்து நாடும் ஒன்றாகும். கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது சிறிது தளர்ததபட்டுளது. அநேகமாக வரும் 11 ஆம் தேதி முதல் இந்நாட்டில் ஊரடங்கு முழுமையாக விலக்கப்படலாம் என கூறப்பட்டாலும் கொரோனா அச்சம் கர்ணமாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என கூறப்படுகிறது.
பிரபல பொருளாதார நிபுணரான கிரிகோரி பார்பி சுவிட்சர்லாந்தின் பொருளாதார நிலை குறித்து, “கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த நாடு பல நடவடிக்கைகள் எடுத்த போதிலும் அங்கு கொரோனாவின் ஆதிக்கம் இன்னும் உள்ளது. எனவே மக்கள் தற்போது நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொரோனாவுடனேயே வாழ்க்கையை தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் முன்பு போல நடக்காது என்பதால் பலருக்கும் வருமானம் குறையும் அபாயம் உள்ளது.
இந்த பொருளாதார பாதிப்பு குறித்து யாராலும் சரியாகக் கணிக்க முடியாத நிலை உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து தெரிவிக்கின்றனர். பல விஷயங்களில் அவர்கள் கருத்து வேறுபட்டு இருந்தாலும், தற்போதைய நிலையால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரியும் என்பதிலும் அதைச் சீர் செய்யப் பல காலம் ஆகும் என்பதிலும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர். நோயின் கடுமை குறைய அதிக காலம் ஆகாது என்றாலும் அதனால் உண்டான பொருளாதார சீரழிவைச் சீர் செய்ய சில வருடங்கள் ஆகும்.
நாட்டில் உள்ள நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு உடனடியாக திறக்க முடியாத நிலையில் உள்ளன. உணவுத் துறைக்கு மட்டுமே நல்ல நிலை உள்ளது. எனவே பல நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளன. வரும ஆண்டுகளில் பொருளாதார நிலை சீரடைய உடனடி வாய்ப்பு இல்லாததால் ப்ல தொழிற்சாலை திட்டங்கள் ஒத்தி வைக்கப்படும்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் பலதரப்பட்ட மக்கள் மறைமுகமாக ஏழ்மை நிலையை நோக்கி செலுத்தபபடுகின்றன்ர். தற்போது பொருளாதாரம் ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளதால் நாடே கடும் ஏழ்மை நிலையை விரைவில் சந்திக்கும் அபாயம் உள்ளது. பணி இன்மை அதிகரிப்பதால் சமுதாய காப்பீட்டுத் துறைக்கு அதிக சுமை உண்டாகும். இதைக் குறைக்க அரசு முயற்சி செய்தாலும் மக்களுக்கு முழு பயன் கிடைக்காது என்பதால் பலரும் கடன் வாங்கும் நிலைக்கு செல்லக்கூடும்.
கடந்த சில வருடங்களாக செல்வச் செழிப்புடன் இந்த சுவிட்சர்லாந்து விரைவில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை அளிக்கவும் இயலாத நிலைக்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்த சவாலைச் சந்திக்க சுவிட்சர்லாந்து தயாராக உள்ளதா? இப்போது நிச்சயமாகச் சொல்ல முடியாது. மிகச் சிறிய நாடான சுவிட்சர்லாந்தில் தற்போது பிரமாண்டமான அளவில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளதால் பல தோல்விகளைச் சந்திக்க நேரிடலாம்.
சுவிடர்லாந்து மக்களை பொறுத்தவரைப் பணி இல்லாத நிலை அதிகம் ஏற்படும் என்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படும். ஆனால் சரியான வருமானம் இல்லாத நிலையில் கடனை திருப்பிச் செலுத்துவது எவ்வாறு? அதுவும் அதிகநாள் வேலை இன்மை இருந்தால் அது ஒரு வகையான சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். இதனால் பணிகளில் கடும் முடக்கம் உண்டாகவும் வாய்ப்பு உண்டு.
இது சற்றே அதிகப்படுத்துவதாக தோன்றலாம். ஆனால் உண்மை நிலைக்கு இது மிக அருகிலேயே உள்ளது. ஏழ்மையை அடையும் சுவிட்சர்லாந்து அதிலிருந்து மீளக் கடுமையாக உழைத்து மற்ற நாடுகளில் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும். ஏழ்மை நிலையைப் போக்க உலக நாடுகளின் உதவியை அவசியம் கோர வேண்டிய நிலை உண்டாகும்.
தற்போது பொருளாதார சீர்கேடு தொடக்க நிலையில் உள்ள போதிலும் இது இரண்டாம் உலகப் போரில் நாடு இருந்த நிலையைப் போல் உள்ளது. அதைவிடவும் அதிகம் எனவும் கூறலாம். உலகம் முழுவதும் பொருளாதார சீர்கேடு உள்ள நிலையில் இது சுவிட்சர்லாந்தைக் கடுமையாகப் பாதிக்கும். பல நேர்மையான மக்கள் பணிகளை இழக்கும் நிலை ஏற்படுவதால் நிச்சயம் அவர்களுக்கு ஒரு சலிப்புத் தன்மை உண்டாகும்.
இதைப் போக்க ஒரே வழி மக்களிடையே தைரியத்தை உண்டாக்கி அவர்களை இந்த நிலையை சந்திக்க தயார்ப்படுத்த வேண்டும். உற்பத்தி மற்றும் வர்த்தக அதிகரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். வருமானத்தை அதிகரிக்க வேண்டியது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பாகும். தற்போதைய நிலையில் இதற்கு மிக மிக அதிகம் அக்கறை செலுத்த வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.