புதுச்சேரி,
புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து பன்றிக்காய்ச்சல் காரணமாக இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் இதுவரை 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று புதுவை முருகப்பாக்கத்தை சேர்ந்த மதியழகன் (வயது 50) பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இதனால் புதுவையில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே பன்றிக்காய்ச்சல் காரணமாக இதே பகுதியைச் சேர்ந்த பானுமதி , பெரிய காலாப்பட்டு முருகன் மற்றும் அரியாங்குப்பத்தை சார்ந்த 39 வயதான சத்யராயணன் ஆகியோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.