சேலம்

சேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு இடிக்கப்பட்டதால் நகர மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நகரின் பாரம்பரிய நினைவுச் சின்னம் என போற்றப்பட்டு வந்த மணிக்கு கூண்டு இருந்தது. அந்த மணிக்கூண்டு நகர மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்துள்ளது. பலருக்கு பேருந்து நிலையத்தில் அதுவே ஒரு அடையாளமாக இருந்து வந்தது.

புதியதாக வருபவர்களை மணிக்கூண்டு அருகே நிற்கச் சொல்லி அடையாளம் சொல்வது மட்டுமின்றி பழைய மக்களும் அதை ஒரு சந்திப்பு இடமாக கருதி வந்தனர்..

அது மட்டுமின்றி கையில் கடிகாரம் உள்ளவர்களும் அந்த மணிக்கூண்டு கடியார மணியை கண்டு சரி செய்துக் கொள்வதும் அது தவறாக இருந்தால் அது குறித்து புகார் அளிப்பதும் பழைய பேருந்து நிலையத்தில் சகஜமான ஒன்றாகும். மொத்தத்தில் சேலம் மக்களுக்கு இந்த மணிக்கூண்டு என்பது வாழ்வில் ஒரு நினைவுடன் தொடர்புடையதாக இருந்தது.

பலருக்கு அந்த மனிக்கூண்டு பள்ளி பருவத்தில் வியப்பையும், கல்லூரி காலத்தில் தோழமையையும் அளித்து வந்தது. சுமார் 60 வருடங்களில் இந்த மணிக்கூண்டு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி நேற்று காலை 12.11 மணி அளவில் இடிக்கப்பட்டுள்ளது. இந்த சோகம் குறித்து சேலம் மக்கள் பலரும் வருந்தி வருகின்றனர்.

அனைவரின் வருத்தத்தின் இடையே மணிக்கூண்டு பிரியாவிடை பெற்று மறைந்து விட்டது.