பிரபல இந்திய யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானி, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஷிஷ் சஞ்சலானி தனது சமூக ஊடகங்களில் எல்லியை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “இறுதியாக” என்று எழுதியுள்ளார். இதன் மூலம், அவர் நடிகையுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆஷிஷ் சஞ்சலானிக்கு யூடியூப்பில் 3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 70 லட்சம் பின்தொடர்பவர்களும் உள்ளனர். அவர் ஃபேஸ்புக் மற்றும் எக்ஸிலும் பிரபலமாக உள்ளார்.

மும்பையை தளமாகக் கொண்ட இவர், இந்தியாவின் முன்னணி கன்டென்ட் கிரியேட்டர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

எல்லி அவ்ராம் பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையிலும் பிரபலமானவர்.

இவர் 2022ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.