டெல்லி: கருப்பை வாய் புற்​று​நோயை தடுக்க ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான் என்ற பெயரில் நாடு தழு​விய எச்​பிவி ( HPV ) தடுப்​பூசி இயக்​கத்தை தொடங்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. உலகில் பதிவாகும் 3இல் ஒரு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில் தான் பதிவாகி வருகின்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

14 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட வயதுடைய சிறுமிகளுக்​கான நாடு தழு​விய ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்​திய அரசு விரை​வில் தொடங்க உள்​ளது. இந்த இலவச தடுப்பூசி வழங்கும்  தன்​னார்​வத் திட்​டம் வரும் வாரங்​களில் நாடு முழு​வதும் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

பெண்​களைப் பாதிக்​கும் பொது​வான புற்​று​நோய்​களில் ஒன்​றான கருப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.   இந்​தத் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும் நான்கு வகைப்​பாடு​களைக் கொண்ட எச்​பிவி தடுப்​பூசி, கருப்பை வாய் புற்​று​நோய்க்கு முக்​கிய காரண​மான எச்​பிவி வகைகள் 16 மற்​றும் 18, அத்​துடன் 6 மற்​றும் 11 ஆகிய வகை​களி​லிருந்​தும் பாது​காப்​பளிக்​கும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

பெண்களுக்கு அதிக அச்சுறுத்தலாக இருக்கும் கருப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு தழுவிய HPV தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த வைரஸ் காரணமான நோயை தடுப்பதற்காக, சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கி, புற்றுநோய் அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நவீன கால வாழ்க்கையில் புதிய வகையான நோய் பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் உள்ள பெண்களை பெருமளவில் சமீப காலமாக அச்சுறுத்தும் நோயாக கருப்பை வாய் அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளது. உலகில் பதிவாகும் 3இல் ஒரு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில் தான் பதிவாகி வருகின்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் 80,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோயின் பாதிப்பு பதிவாகிறது. மேலும், 42,000க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் இந்தியாவில் இந்த நோய் காரணமாக மரணமடைகின்றனர்.

இத்தகைய ஆட்கொல்லி நோயை தடுக்கும் விதமாக மத்திய அரசு நாடு தழுவிய HPV தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று மனித பாப்பிலோமா வைரஸ் (HPV). 95 சதவீத பாதிப்புகளில் HPV சம்பந்தப்பட்டிருக்கிறது. அத்துடன் 15-44 வயதுடைய பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. கருப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான வழி, அதற்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்வதாகும்.

ஹியூமன் பாபிலோனா வைரஸ் (Human papillomavirus) என்ற ஒரு வைரஸால் ஏற்படக்கூடிய இந்த புற்றுநோயை தடுப்பதற்கு HPV என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட HPV 16, 18 வகை வைரஸ் பாதிப்பு தான் காரணமாக அமைந்துள்ளது. எனவே, இந்த பாதிப்பை தடுக்கும் விதமாக தடுப்பூசியை இந்த திட்டத்தின் கீழ் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தடுப்பூசியின் விலையானது சுமார் ரூ.4,000 ஆகும். ஆனால், மத்திய அரசின் நாடு தழுவிய திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களும் பயன்பெரும் விதமாக இலவசமாக இந்த தடுப்பூசி பயனாளர்களுக்கு செலுத்தப்படவுள்ளது. சிறுமிகள் பூப்படையும் முன்பு கருப்பை வாய் தடுப்பூசி செலுத்திக் கொள்வது, செர்விக்கல் கேன்சர் ஏற்படுவதற்கான அபாயத்தை 90 சதவிகிதம் குறைக்கும் என மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான் (SNSPA) என்ற இந்தியாவின் மாபெரும் சுகாதார இயக்கத்தின் கீழ் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. SNSPA திட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் நோய் தடுப்பு (குறிப்பாக ரத்த சோகை, புற்றுநோய், காசநோய்) ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

HPV தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவெடுத்ததன் மூலம் உலகில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் 160 நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்போகிறது என்பது குறித்த விரிவான விவரங்கள் இன்னும் சில வாரங்களில் தெரிய வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]