இராணுவத்தின் சதி திட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்- ஆங் சான் சுகி

Must read

மியான்மர்:

மியான்மரின் நடைமுறை தலைவரும் மாநில ஆலோசகருமான ஆங் சான் சூகி அவருடைய ஆளும் தேசிய லீக் கட்சியிலிருந்து அவரையும் இன்னும் பல மூத்த உறுப்பினர்களையும் கைது செய்த காரணத்தால் ராணுவம் நடத்திய இந்த சதி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதைப்பற்றி ஆங் சான் சூகி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ராணுவம் நமக்கு எதிராக செய்த சதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம், இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும், ராணுவத்தின் இந்த நடவடிக்கை நாட்டை மீண்டும் சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது… ஆகவே ராணுவத்தின் இந்த சதி திட்டத்திற்கு எதிராக மக்கள் முழுமனதுடன் எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஆங் சான் சூகி தெரிவித்திருந்தார்.

More articles

Latest article