டில்லி
காணாமல் போனதாக கருதப்பட்டு ஆனால் கடத்தப்பட்ட கப்பல் 22 இந்திய மாலுமிகளுடன் மீட்கப்பட்டுள்ளதற்கு உதவிய நைஜீரியாவுக்கு சுஷ்மா நன்றி தெரிவித்துள்ளார்.
எண்ணெய் டேங்கர் ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு வாணிபக் கப்பல் மேற்கு ஆப்ரிக்க கடலில் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகியது. இதில் 22 இந்திய மாலுமிகள் இருந்தனர். இதையொட்டி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நைஜீரிய அரசுக்கு கப்பலை தேடித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வாணிகக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதை ஒட்டி பலரும் பரபரப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் அந்த கப்பல் நிறுவனம், கப்பல் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும், அந்த கப்பலில் உள்ள 22 இந்தியர்கள் உட்பட அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் தகவல் வெளியிட்டது.
இதையொட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தனது நன்றியை நைஜீரிய அரசுக்கு தெரிவித்துள்ளார்.