நியூயார்க்

மெரிக்க அதிபர் மகள் இவாங்கா ட்ரம்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பல நாட்டு தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.   அந்த வரிசையில் நேற்று அமெரிக்க அதிபரின் மகளும் ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.   இரு நாடுகளிலும் உள்ள பெண் தொழில் முனைவோர் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடியதாக இருவரும் தெரிவித்தனர்.

வரும் நவம்பர் மாதம் 28 முதல் 30 தேதி வரை ஐதராபாத் நகரில் தொழில்முனைவோர் கூட்டம் நடைபெற உள்ளது.   அதில் உலகெங்கும் உள்ள பல தொழிலதிபர்கள் கலந்துக் கொள்கின்றனர்.   அந்த கூட்டத்தை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்துகிறது.   அமெரிக்காவின் சார்பில் அதில் இவான்கா ட்ரம்ப் கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.    அதையொட்டி தனது சந்திப்பில் இவாங்காவின் வருகையை பற்றி சுஷ்மா பேசி உள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து இவான்கா தனது டிவிட்டர் பக்கத்தில் படிந்துள்ளார். அதில், தன்னை கவர்ந்த பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அவர் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததாகவும் அது தற்போது மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

சுஷ்மா தனது ஒருவார அமெரிக்க சுற்றுப் பயணத்தில் பல நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார்.  வரும் 23 ஆம் தேதி அவர் ஐ நா சபையில் உரை நிகழ்த்துகிறார்.   அதன் பிறகு அவர் இந்தியாவுக்கு திரும்புவார்.