புதாபி

க்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இஸ்லாமிய அமைப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சிறப்பு விருந்தனராக கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அகில உலக இஸ்லாமிய அமைப்பான அர்கானிசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கார்ப்பொரேஷன் (ஓஐசி) யில் பல இஸ்லாமிய நாடுகள் பங்கு பெற்றுள்ளன.   இதில் முக்கியமான நாடுகளான இந்தோநேசிய, அல்ஜீரியா மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்து வருகின்ரன.

இந்த அமைப்பில் உள்ள பங்களாதேஷ் உஸ்ப்பெகிஸ்தான், கசகஸ்தான், அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் நட்பு நாடுகளாக உள்ளன.  அத்துடன் தற்போது இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த அமைப்பில் உள்ள பல நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன.

வரும் மார்ச் மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் இந்த அமைப்பின் கூட்டம் அமிரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் க்கு அமைப்பின் சார்பில் அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நாயன்  அழைப்பு அனுப்பி உள்ளார்.

இது குறித்து அமீரகம், “நமது நட்பு நாடான இந்தியா இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவின் சரித்திரம் மற்றும் கலாசாரம் மிகவும் புகழ் பெற்றதாகும்.   அத்துடன் இஸ்லாமிய நாடாக இல்லாத போதிலும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் தொகை அதிகமாக உள்ளது” என தெரிவித்துள்ளது.

இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “இந்தியாவுக்கு அமீரகத்துக்கும் இடையில் உறவுகள் நன்கு வளர்ந்து வருகிறது.  அதில் இந்த அழைப்பை ஒரு மைல் கல்லாக நாங்கள் பார்க்கிறோம்.   இது இந்தியாவில் உள்ள 18.5 கோடி இஸ்லாமிய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒர் அங்கீகாரம் ஆகும்.

அத்துடன் இஸ்லாமியர்களுக்கு இந்தியா செய்து வரும் நன்மைகளை உலக நாடுகள் வரவேற்கின்றன என்பதற்கு இது ஒரு அறிகுறி ஆகும்.    உலக இஸ்லாமியர்களுக்கு இந்தியாவை குறித்து மேலும் புரிய வைக்க இந்த அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்.   அழைப்புக்காக அமீரக தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என பதில் அளித்துள்ளது.