டில்லி:

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு சீனாவின் குயிங்டோ நகரில் ஜூன் மாதத்தில் நடக்கிறது. இதற்கான முன்னோட்டமாக கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் ஏப்ரல் 23ம் தேதி பீஜிங் நகரில் நடக்கிறது.

இதில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார். இதற்காக 28-ம் தேதி ஜப்பான் செல்லும் அவர் அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார்.

அங்கு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பிரதிநிகளை சுஷ்மா சந்திக்க உள்ளார். இதில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கலந்து கொள்கிறார். இதன் பின்னர் சீனாவுக்கு சுஷ்மா சென்று வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.