டில்லி:

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மாரடைப்பு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானா சுஷ்மா சுவராஜின் உடல்  தற்போது டில்லி யில் அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சுஷ்மாவின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மலர் வளையம் வைத்த அஞ்சலி செலுத்தினர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட அனைத்துக்கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராகுல்காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சுஷ்மாஜி ஒரு அசாதாரண அரசியல் தலைவர், ஒரு திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஒரு விதிவிலக்கான நாடாளுமன்ற உறுப்பினர், கட்சி பாகுபாடுகளை கடந்து அனைவருடனும் நட்பு பாராட்டிய சிறந்த தலைவர் என ராகுல் காந்தி  அவரது மறைவைப் பற்றி கேள்விப்பட்ட நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்.

அவளுடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். ஓம் சாந்தி… இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

சுஷ்மா சுவராஜின்  இறுதி சடங்கு இன்று மாலை அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.