டில்லி
ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் முந்தைய மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சர் பதவி வகித்து வந்தார். அவருடைய பணிகளை பலரும் புகழ்ந்து வந்தனர்.
ஆயினும் தற்போதைய அமைச்சரவையில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஆந்திர மாநிலத்துக்கு புதிய ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆந்திர ஆளுநராக நரசிம்மன் பதவி வகித்து வருகிறார்.
[youtube-feed feed=1]