நேற்று மாலை 5 மணி அளவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக எயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு முதல்நிலை சிகிச்சைக்கு பிறகு இரவு 10 மணிக்கு கார்டியோ நியூரோ பிரிவிக்கு மாற்றப்பட்டு இருந்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சுஷ்மா ஜுரம், நெஞ்சுவலி மற்றும் ஜன்னி (நிமோனியா)”விற்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்த மருத்துவமனை வட்டாரங்கள் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளன.
64 வயதான சுஷ்மா நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டு சிகிச்சையெடுத்து வருகின்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெரும், ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் மறுவாழ்வினை உறுதிப் படுத்த இந்தியா ஏற்பாடு செய்த “ஆசியாவின் இதயம் ” எனும் மாநாட்டிலும் அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். தற்பொழுது அவருக்கு பதிலாக ஜெனரல் வி.கே.சிங் மாநாட்டில் கலந்து கொள்வாரென அறிவிக்கப் பட்டுள்ளது.