சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மரணம் அவரது குடும்பத்தினரையும் நெருங்கிய நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் அனைவரையும் கலங்கடித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திறமையான நடிகர் ஜூன் 14 அன்று தனது மும்பை குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாலிவுட்டில் நடக்கும் சினிமா வாரிசு அரசியல் பற்றி காரசாரமாக எழுதி வருகின்றனர் .
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் மும்பை போலீசாருக்கு இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது. ஆரம்ப கண்டுபிடிப்புகளை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது, ஜூன் 14 அன்று தூக்கிலிடப்பட்டதால் மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துள்ளார்.
இறுதி அறிக்கையில் சுஷாந்தின் உடலில் வெளிப்புற காயம் குறிகள் எதுவும் இல்லை என்றும் அவரது நகங்களும் சுத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளது. எனவே, இது தற்கொலை தான் என ஊர்ஜிதமாகிறது .
தற்காலிக பிரேத பரிசோதனை அறிக்கையில் மூன்று மருத்துவர்கள் கையெழுத்திட்டனர், இறுதி அறிக்கையில் மருத்துவ பயிற்சியாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
மறைந்த நடிகரின் உள்ளுறுப்பு பாதுகாக்கப்பட்டு ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் பகுப்பாய்வு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக மும்பை காவல்துறை தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும் சுஷாந்த் இறந்த அன்று சுஷாந்த் தங்கியிருந்த குடியிருப்பு கட்டிடத்தின் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் 23 பேரின் அறிக்கையை போலீசார் இதுவரை பதிவு செய்துள்ளனர்.