பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு தொடர்பாக யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்ஆர்எஃப்) தலைவர் ஆதித்ய சோப்ரா மும்பை காவல்துறையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரை வேறு படங்களில் நடிக்கவிடாமல் மன அழுத்தம் தந்ததே தற்கொலைக்கு கார்ணம் என தகவல் வெளியானது.
யஷ் ராஜ் பிலிம்ஸ் உடன் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் மூன்று படங்களின் ஒப்பந்தம் இருந்தது. முதல் படம் பரினிதி சோப்ரா மற்றும் வாணி கபூர் ஜோடியாக நடிக்கவிருந்த சுத் தேசி ரொமான்ஸ். இரண்டாவது படம் துப்பறியும் பியோம்கேஷ் பக்ஷி. மூன்றாவது படம் சேகர் கபூர் இயக்கவிருந்த பானி.
சேகர் கபூருக்கும் ஆதித்யா சோப்ரா வுக்கும் இடையே கருத்து வேற்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பானி படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சஞ்சய் லீலா பனசாலியின் 3 படங்களில் நடிக வந்த வாய்ப்புகளைஏற்க மூடியாமல சுஷாந்த் மனம் உடைந்தார். அப்படங்கள் பின்னர் வேறு ஹீரோக்கள் நடித்து திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆனது. தன்னை வேற்படங்களில் நடீஅ விடாமல் ஒபந்தம் மூலம்முடக்கிவிட்டதாக கலங்கி அந்த விரக்த்தியில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்கும் பாந்த்ரா போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும்க யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்ஆர்எஃப்) தலைவர் ஆதித்ய சோப்ராவை மும்பை போலீசார் வரவழைத்து விசாரித்தனர்.
முன்னதாக, திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி தனது வாக்கு மூலத்தை போலீசில் பதிவு செய்திருந்தார். ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் ஆகியோரை சுஷாந்திற்கு வழங்கியதாக அவர் வெளிப்படுத்தி யிருந்தார், ஆனால் நடிகர் YRF உடன் ஒப்பந்தத்தில் இருந்ததால் தேதிகள் கிடைக்காததால் அதில் நடிக்க முடிவில்லை என்று தெரிவித்தார்.