நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூஸன் கானின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு மீண்டும் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் சூஸன் கான், “இன்ஸ்டாகிராமிலிருந்து வந்ததுபோல ஒரு போலி மின்னஞ்சல் வந்தது. அது போலியானது என்பதை நான் உணராமல் அதை க்ளிக் செய்துவிட்டேன். எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. தயவுசெய்து இப்படியான எந்த ஏமாற்று மின்னஞ்சல்கள், செய்திகள் வந்தாலும் நீங்கள் யாரும் க்ளிக் செய்து விடாதீர்கள்.
இந்தச் சூழலில் உடனடியாக உதவி, எனது கணக்கை மீட்ட இன்ஸ்டாகிராமில் இருக்கும் அற்புதமான குழுவுக்குப் பெரிய நன்றி. சைபர் திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.