டில்லி

டந்த 2014 ஆம் ஆண்டு மோடி பதவி ஏற்றபிறகு சென்ற ஆண்டு இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாகி உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவி ஏற்றார்.  அதற்கு முந்தைய ஆண்டு அதாவது 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராகவும் சிதம்பரம் நிதி அமைச்சராகவும் இருந்த போது பொருளாதார நிலை குறித்து ஒரு கணக்கெடுப்பு நடந்தது.   அப்போது 60% பேர் இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகக் கருத்து தெரிவித்தனர்.

அதன்பிறகு மோடியின் அரசில் 2017  ஆம் ஆண்டு அருண்ஜெட்லி நிதி அமைச்சராகப் பதவியில் இருந்தபோது கணக்கெடுப்பு நடந்தது.  அப்போது 52.6% பேர் இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட முன்னேறி உள்ளதாகக் கருத்து தெரிவித்தனர்.     ஆனால் 2019 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் பொருளாதார நடவடிக்கைகள் மோசமாகி உள்ளதாகக் கூறப்பட்டது.

2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு 39.6% மதிப்பெண்கள் கிடைத்தன. இது மோடி அரசு பதவி ஏற்ற பிறகு கிடைத்த மிகவும் மோசமான மதிப்பெண் ஆகும்.  இது முந்தைய மன்மோகன் ஆட்சி கால பொருளாதார நடவடிக்கைகள் குறித்த கருத்தை விடவே மிகவும் குறைவானதாகும்.