ரத்தினக் குமார் எனும் புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சர்வைலன்ஸ் ஜோன்’ .
இந்த திரைப்படம் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நீளம் கொண்டது , ₹45,000 இல் எடுக்கப்பட்ட சோதனை முயற்சியிலான தமிழ்ப் படம். இந்தப் படம் கெனான் 550டி மற்றும் கோ ப்ரோ கேமாராவில் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தில் இஃபால், குணா, ரகுராம் இரவிச்சந்திரன் ஆகியோர் சவுண்ட் டிசைன் செய்துள்ளனர்.டில்லி யில் நடத்தப்பட்ட தாதா சாஹேப் உலக திரைப்பட விழாவில் இப்படத்திற்கு விருதும் கிடைத்துள்ளது.