
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘சுருளி’ படத்தை YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது .
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி , சஞ்சனா நடராஜன் ஆகியோர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தனுஷ் நடிக்கும் சுருளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அப்டேட் நாளை வெளியாகும் என வொய் நாட் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.
தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் கலையரசன், தீபக் பரமேஷ், வடிவுகரசி, சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கபிலன் வைரமுத்து, விவேக் வரிகளில் பாடல்கள் உருவாகி வருகின்றன.
Patrikai.com official YouTube Channel