டாக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை, முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது வங்கதேச அணி.
ஜேஸன் முகமது தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்று, தொடரைக் கைப்பற்றிவிட்டது வங்கதேசம்.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, சிட்டகாங்கில் நடைபெற்றது. இதில் டாஸ்வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில், துவக்க வீரரான கேப்டன் தமிம் இக்பால், முஷ்பிக்குர் ரஹிம் மற்றும் மகமதுல்லா ஆகிய மூவரும் சொல்லிவைத்தாற்போல் சரியாக 64 ரன்களை அடித்தனர். ஷகிப் அல் ஹசன் 51 ரன்களை அடித்தார்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த விண்டீஸ் அணி 297 ரன்களைக் குவித்தது.
பின்னர், கடின இலக்கை விரட்டிய விண்டீஸ் அணிக்கு துவக்கமே சரியாக அமையவில்லை. அந்த அணியின் ரவ்மான் பாவல் அடித்த 47 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள்.
இறுதியில், 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 177 ரன்கள் மட்டுமே எடுத்து, 120 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது விண்டீஸ் அணி. இதன்மூலம், ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது விண்டீஸ் அணி.
வங்கசேதம் அணி சார்பில், மொத்தம் 8 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.