சூரரை போற்று வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும், ஓ.டி.டி படத்திற்கான ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் நவரசா என்ற திரைப்படத்தை நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு தயாரிக்கிறார். இது 9 சிறிய கதைகளை கொண்டு உருவாகவுள்ளது. இதில் ஒரு பகுதியாக சூர்யா நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். மேலும் அண்மையில் சூர்யாவின் புதிய கெட்டப் இந்த பகுதிக்காகதான் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு பயங்கர எனர்ஜியுடன் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/pcsreeram/status/1328584610503135232

 

[youtube-feed feed=1]