
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் நாயகியாக பிரியங்கா மோகன், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
மேலும் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
COVID-19 சிகிச்சையைத் தொடர்ந்து, தனது வீட்டு தனிமைப்படுத்தலை முடித்தவுடன் படப்பிடிப்பில் சூர்யா விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சூர்யா 40 படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நடிப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]