நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் நாளை (நவம்பர் 2ஆம் தேதி) நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார்.

மலைக் கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களமாக உருவாகியிருக்கும் ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இருளர் பழங்குடியின மக்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.