
சென்னை: இந்திய அணியில் ‘அடுத்த தோனி’ என்று அழைக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்தவர் ரோகித் ஷர்மாதான் என்றுள்ளார் முன்னாள் இந்திய அணி வீரரும், தற்போதைய சிஎஸ்கே அணி வீரருமான சுரேஷ் ரெய்னா.
ஒரு கேப்டன் என்ற முறையில், தோனி எப்படி சிறப்பான கிரிக்கெட் வீரரோ, அந்த தகுதிகள் அனைத்தும் ரோகித் ஷர்மாவிடம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் அமைதியானவர். அவர் பிறர் சொல்வதைக் கேட்கக்கூடியவர், பிற வீரர்களிடம் நம்பிக்கையை விதைக்கக்கூடியவர் மற்றும் முன்னணியில் நின்று வழிநடத்தக்கூடியவர்.
அதேநேரம், டிரெஸ்ஸிங் அறை சூழலுக்கு அவர் மரியாதை அளிப்பவர். நான் அவருடன் ஆடியிருக்கிறேன். ஒவ்வொருவரும் கேப்டன் என்றே அவர் நினைப்பார்.
நான் வங்கதேசத்தில் நடந்த ஆசியக் கோப்பைப் போட்டியின்போது, அவரின் கீழும் ஆடியுள்ளேன். இளம் வீரர்களுக்கு அவர் எப்படி ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறார் என்பதை கவனித்துள்ளேன். அவர்தான் அடுத்த தோனி” என்றுள்ளார் ரெய்னா.
Patrikai.com official YouTube Channel