கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருவரை வைரஸ் தாக்கினால், அவருக்கு அதற்கான அறிகுறிகள் வெளியில் தெரிய சுமார் 14 நாட்கள் ஆகும் என்பதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபியின் மகன், சமீபத்தில் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். மேலும், அவர் பயணித்த விமானத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுரேஷ் கோபி தனது மகனுக்கு தனியாக ஒரு பிளாட் எடுத்து அதில் தனது மகனை தனிமைப்படுத்தியுள்ளாராம்.
சுரேஷ் கோபியின் மகனுக்கு இதுவரை கொரோனா பாதிப்பிற்கான எந்த ஒரு அறிகுறியும் ஏற்படவில்லை, என்றாலும் பிறரின் நலனுக்காக அவர் இப்படி ஒரு முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.