சூரத் நகரில் உள்ள புகழ்பெற்ற ஆடைவடிவமைப்பு நிறுவனம் ஒன்று, புல்வாமா மற்றும் பால்கோட் பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை மையமாகக் கொண்டு புடவை ஒன்றை வடிவமைத்துள்ளது.

pulwama_and_army_design

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு பல நாடுகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமனாத்தை விரட்டியடித்ததில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து உலக நாடுகளின் அழுத்தத்தினால் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது.

saree

இதையடுத்து அபிநந்தனின் வீரத்தையும், மன உறுதியையும் பாராட்டும் விதமாக அவருக்கு விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறது. இளைஞர்கள் மத்தியில் நிஜ ஹீரோவாக வளம்வரும் அபிநந்தன் புகழப்படுகிறார்.

saree

இந்நிலையில் சூரத்தில் உள்ள பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்று, பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலையும், விமானப்படை வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடி, அபிநந்தன் மற்றும் இந்திய போர் விமானத்தின் புகைப்படங்களை கொண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற பெயர் அச்சிட்டு பிரத்யேக புடவையை வடிவமைத்துள்ளது. இந்திய வீரர்களின் பெருமையை பறைசாற்றும் இந்த புடவை 4 மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த புடவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன்னதாக பிரதமர் மோடியின் உருவம் பதித்த புடவை விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.