சூரத்: முன்னாள் ஐ-டி அதிகாரியும், தற்போதைய சூரத் நகர பாஜக தலைவருமான பிவிஎஸ் சர்மா மீது, மோசடி மற்றும் பித்தலாட்ட குற்றத்திற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு செய்தித்தாள்களுக்கு, அரசு மற்றும் தனியார் விளம்பரங்களைப் பெறுவதற்காக, அந்த செய்தித்தாள்கள் அதிகளவில் விற்பனையாகின்றன என்று பொய்யான ஆவணங்களைக் காட்டியதாக அவர் மீது புகார் பதியப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநர் கே.டி.பம்மயாவால் இந்தப் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பின்போது, முறைகேட்டில் ஈடுபட்டார் என்றும், இவர்மீது கடந்த மாதம் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

 

[youtube-feed feed=1]