சூரத்:
கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பலாம் என்று மத்தியஅரசு அறிவித்துள்ள நிலையில், இதை வைத்து பாஜகவினர் கல்லா கட்டி வருகின்றன.
குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உ.பி. மாநிலம் செல்ல விரும்பும் தொழிலாளர்களிடம் தலைக்கு ரூ.1000 கட்டம் தர வேண்டும் என்று சூரத் பாஜக கவுன்சிலரின் தம்பி ஒருவர் பேரம் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
லாக்டவுன் காரணமாக பணியிடங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் வகையில் மே 1ம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்களுக்கு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இப்பணியில் 115 சிறப்பு ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க ரயில்வே உத்தரவிட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ”வெளிநாட்டில் சிக்கியிருக்கும் நம்முடைய குடிமக்களுக்காக இலவசமாக விமானப் பயணத்தை ஏற்பாடு செய்கிறது. வறுமையில் வாடும் தொழிலாளர்களிடம் பணம் வசூலிக்கிறது என்று கடுமையாக சாடியதுடன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயணச்செலவை காங்கிரஸ் ஏற்கும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழகம் உள்பட சில மாநில அரசுகள், புலம்பெயர் தொழிலாளர்களின் பயணச் செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளன.
ஆனால், குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியைச் சேர்ந்த சுமார் 80 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கது மாநிலமான உத்தரபிரதேசம் செல்ல ஏற்பாடு செய்வதாக கூறிய சூரத் பகுதி பாஜக கவுன்சிலர் அமித் ராஜ்புத்தின் சகோதரர் அமர், ஒவ்வொருவரும் தலா ரூ.1000 தர வேண்டும், மொத்தமாக ரூ.80ஆயிரம் கொடுத்தால், அவர்களை அனுப்பி வைப்பதாக பேரம் பேசுகிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவிப்பின்படி, கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணச் செலவை காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி ஏற்று வருவது குறிப்பிடத்தக்கது.