மும்பை:

பெண்கள் குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் விமர்சனம் செய்த  கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யாவுக்குக்கு தலா ரூ 10 லட்சம் அபராதம் விதித்து  ஓம்புட்ஸ்மன் நீதிபதி உத்தரவிட்டுள்ள்ர்.

மேலும்,  உயிரிழந்த 10 துணை ராணுவப் படையினர் குடும்பத்துக்கு தலா ரூ 1 லட்சம் வழங்க  வீதம் 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும்,  பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்கு தலா தலா ரூ.10  லட்சம் வழங்கவும் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  பாலிவுட் பட இயக்குனரான கரன்ஜோஹர் நடத்தும், காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட  இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக்பான்ட்யா  மற்றும் லோகேஷ் ராகுல் இருவரும்,  தங்களது சொந்த விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.

அப்போது,  “கருப்பு ஆளுங்களான எங்களுக்கு பெண்களைப் பார்த்தால் ஒரு ஈர்ப்பு வரத் தான் செய்யும். நான் முதன் முதலாக எனது வெர்ஜினிட்டியை இழந்த பிறகு, அந்த சம்பவத்தை முதன் முதலாக எனது தாயிடம் தான் தெரிவித்தேன் என்றார்.  அதுபோல  லோகேஷ் ராகுலும்,  என் ரூமிற்கு வெளியே வேறொரு வீரரின் அறைக்குச் சென்று பெண்ணுடன் இணைந்து செக்ஸில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று பதில் கூறினார்.

அப்போது, கரன் ஜோஹர் அவர்களிடம், ஒரே பெண்ணை இருவருக்கும் பிடித்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்க, “அந்த பெண்ணின் முடிவுக்கே விட்டுவிடுவோம்” என ராகுல் கூற, “இல்லை… இல்லை… யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்” என்று பாண்ட்யா பதில் கூறினார்.

இவர்களின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பெண்கள்அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இருவரும் தங்களது கருத்துக்களுக்கு மன்னிப்பு கோரிய நிலையில், பிசிசிஐ  24 மணி நேரத்திற்குள் அவர்கள் இருவரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது.

இது தொடர்பாக  நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, உச்சநீதி மன்றத்தின்  குறைகேள்  (ஓபுட்ஸ்மேன்) நீதிபதி டி.கே. ஜெயின் பரபரப்பு உத்தரவு வழங்கி உள்ளார்.

அதன்படி, பெண்கள் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யாவுக்குக்கு தலா ரூ 20 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அத்துடன்  உயிரிழந்த 10 துணை ராணுவப் படையினர் குடும்பத்துக்கு தலா ரூ 1 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

மேலும், பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்கு தலா தலா ரூ.10  லட்சம் வழங்கவும்  உத்தரவிட்டு உள்ளது.

ஒம்புட்ஸ்மன் என்றால் என்ன?

உச்சநீதி மன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஒம்புட்ஸ்மன் என்பவர் அரசாங்க அலுவலர்களினால் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அடிப்படை உரிமை மீறல் மனித உரிமை மீறல் போன்ற அநீதிகளுக்கு எதிராக குறை தீர்வு வழங்கும் ஏனைய அதிகாரிகளினுள் முன்னணி பதவி வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டில் ஒம்புட்ஸ்மன் நீதிபதியாக டி.கே.ஜெயின் இருந்து வருகிறார்.