டில்லி

டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அறிவிப்புக்காக பாஜக வேட்பாளர்களை அறிவிக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் வரும் 23 ஆம் தேதி வேட்பாளர் மனு அளிக்க கடைசி தினமாகும். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணிப் பேச்சு இன்னும் இழுபறியில் உள்ளது. எனவே அவ்விரு கட்சிகளும் வாக்காளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளது.

ஆனால் அதே காரணத்துக்காக பாஜகவும் இது வரை வாக்காளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக வட்டாரங்கள் இந்த வார இறுதிக்குள் அல்லது ஞாயிறு அன்று டில்லியின் ஏழு தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கின்றன. அத்துடன் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்யபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முடிவு குறித்து பாஜக காத்திருப்பதாகவும் அதற்கேற்ப வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படு வெளியிடுவார்கள் எனவும் கூறி உள்ளார். மேலும் அவர் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் இளைய தலைமுறை வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக கூறப்படுவதால் அவர்களை எதிர்க்க மூத்த தலைவர்களை களமிறக்க உத்தேசித்துள்ளதாக்வும் கூறி உள்ளார்.

இந்த தகவல் குறித்து பாஜக தலைவர்கள் சிலர் பாராட்டு தெரிவித்ததுடன் இது பாஜகவின் ராஜ தந்திர நடவடிக்கை என புகழ்ந்துள்ளனர். அத்துடன் வேறு சில தலைவர்கள் இவ்வாறு தேர்வு செய்வது கட்சியின் வெற்றிக்கு பாதகமாக அமையலம் என எச்சரித்துள்ளனர்.