வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன், துணைஅதிபராக பதவி ஏற்ற கமலா ஹாரிசுக்கு, கைலாசா நாட்டு அதிபராக தன்னை கூறிக்கொண்டு வரும், சர்ச்சைக்குரிய நித்தியானந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்தில் தன்னை இந்து மத போப்பாண்டவர் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடனும் (78) முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சோந்த கமலா ஹாரிஸும் (56) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். அமெரிக்க அதிபா்கள் வழக்கமாகப் பதவியேற்றுக்கொள்ளும் நாடாளுமன்றத்தின் மேற்குப் பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வருகையாளா்களுடன் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சர்ச்சை புகழ் தலைமறைவு சாமியானரான நித்தியானந்தா பரமசிவம், ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில்,

இந்து மதத்தின் உச்ச போப்பாண்டவர், மற்றும் தலைவர்,  பண்டைய, இந்து, அறிவொளி, நாகரிக தேசமான கைலாசா சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள். உலகெங்கிலும் உள்ள 2 பில்லியன் இந்துக்கள் சார்பாக வாழ்த்துவதாகவும்,  வளமான, அறிவொளி பெற்ற எதிர்காலத்திற்கான உங்களுக்கும், உங்கள் ஜனாதிபதி பதவிக்கும், அமெரிக்காவிற்கும் ஆசீர்வாதம்.
அதன் அனைத்து குடிமக்களுக்கும், யுனைடெட் ஸ்டேட்ஸ் தொடர்ந்து பொறுப்பான தலைமைப் பாத்திரத்தை வகிக்கட்டும். உலகம் மற்றும் எங்கள் நாடு அமைதி, மிகுதி மற்றும் நல்லிணக்கத்துடன் வளர உதவுங்கள்.

இந்து மதத்தின் உச்ச போப்பாண்டவர், ஜகத்குரு மகா சன்னிதனம் பகவன் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம், ஸ்ரீகைலாசா தேசத்தில் இருந்து என தெரிவித்துள்ளார்.