உச்சநீதி மன்ற தீர்ப்பால் பாஜகவின் அரசியல்மயமாக்குவதற்கான கதவு மூடப்பட்டு விட்டது! காங்கிரஸ் கட்சி கருத்து

Must read

டெல்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பால் பாஜகவின் அரசியல்மயமாக்குவதற்கான கதவு மூடப்பட்டு விட்டது என்று  காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.

அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சுமார் 500 ஆண்டுகளாக இழுத்தடிக்கப் பட்டு வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி,  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோ யில் கட்டலாம், அந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமான என்று கூறியது. மேலும், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி சார்பில், இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அயோத்தி தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்  ரந்தீப் சுர்ஜேவாலா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்று கூறினார். மேலும், நாங்கள் ராம் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்று கூறியவர், உச்சநீதி மன்றத்தின், இந்த தீர்ப்பு கோயிலின் கட்டுமானத்திற்கான கதவுகளைத் திறந்தது மட்டுமல்லாமல், பாஜகவுக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதற்கான கதவுகளை மூடி உள்ளது, அயோத்தி இடப்பிரச்னையை அரசியலாக்கும் பாஜக, பிறரின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article