டெல்லி:

ஸ்சி / எஸ்டி திருத்தச் சட்டம், 2018ன் இந்திய அரசியலமைப்புபடி செல்லும் என்று  உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எஸ்சி. எஸ்டி பிரிவினர் மீது சாதிய முறையில் நடத்தப்படும் தாக்குதல்கள், கொடுமைகள் போன்றவை வற்றை தடுக்கும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு  முன்பு  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 29 ஆண்டு களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, புகார்தாரரின் புகாரை ஏற்று,  எந்தவித விசாரணையுமின்றி குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய முடியும். இந்த சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், வன்கொடுமை சட்டத்தின்படி  கொடுக்கப் படும் புகார்களில் உடனடியாக யாரையும் கைது செய்யக்கூடாது. உரிய விசாரணைக்குப் பிறகே கைது நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

‘எஸ்சி-எஸ்டி சட்டம்… எங்கே கோளாறு?

இதைத்தொடர்ந்து, இந்த சட்டத்தில் கடந்த ஆண்டு மத்திய பாஜக திருத்தம் கொண்டுவந்து கடந்த ஆண்டு  மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து   உச்ச நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு  விசாரணைக்கு நடத்தி வந்தது.  ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்ன்போது, மசோதாவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்த நீதிபதிகள், மத்தியஅரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில்,இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், மத்தியஅரசு கொண்டு வந்த எஸ்சி / எஸ்டி (அட்டூழியங்களைத் தடுக்கும்) திருத்தச் சட்டம், 2018 அரசியலமைப்பு படி செல்லுபடியாகும் என்று கூறி உள்ளது.