டெல்லி: ராமர்பாலம் – சேது சமுத்திர கால்வாய் தொடர்பாக சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் இணைக்கும் ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரி பாஜகவின் மூத்த தலைவர், சுப்பிர மணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று விசாரணைக்கு வருகிறது.

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தியை இணைக்க கூடிய மணற்திட்டுகள் அல்லது சுண்ணாம்பு பாறைகள் ஒரு தொடர்ச்சியாக இருக்கின்றன. இது ஒரு பாலம் போன்ற தோற்றத்தைக் கொண்டது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படுகிற கடவுள் ராமர் கட்டிய பாலம் இது என்பது இந்துக்களின் இதுதான் ஆடம் பாலம், ஆதாம் பாலம், ராமர் பாலம், சேம் சேது பாலம்  என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த கால்வாய்தான் சேது கால்வாய் அல்லது சேது சமுத்திர திட்டம் எனப்படுகிறது இதை அமெரிக்க ஆய்வு நிறுவனமான நாசாவும் உறுதி செய்துள்ளது.

இந்த மணற்திட்டு பகுதியால், பெரும் கப்பல்கள் அந்த பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, அந்த மண்திட்டுக்களை அகற்றி,  ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதையடுத்து, அந்த மண்ணை வாரி எடுத்து, ஆழப்படுத்த மத்திய காங்கிரஸ் ஆட்சி முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியது. இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

பின்னர் ஆட்சி மாறியதும், 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி பதவிஏற்றதும், சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டது. ஆனால் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள், ராமர் கட்டிய பாலத்தை இடித்து சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதா? என கொந்தளித்தன. இதைத்தொடர்ந்து,  ராமர் பாலம் ஒரு புராதன சின்னம் என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அறிவித்தது. இதனடிப் படையில் தமிழ்நாடு அரசு, சேது கால்வாய் அல்லது சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.

இப்பின்னணியில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் ராமர் பாலம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனை சுப்பிரமணியன் சுவாமி தரப்பு ஏற்க மறுத்தது. ஆனால் மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைப்பதாக அறிவித்தது. மத்திய அரசு, இதில் முடிவு எடுக்காவிட்டால் சுப்பிரமணியன் சுவாமி தரப்பு மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்பாக சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் ஆஜரானார். ராமர் பாலம் விவகாரத்தில் மத்தியஅரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. ஆகையால் என்னுடைய மனுவை விசாரிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்றுக் கொண்டது தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச். தற்போது அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர் சுப்பிரமணியன் சுவாமி மனு மீது விசாரணை நடத்தப்படும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் நீதிபதிகள் தெரிவித்தனர்.