டெல்லி:  கல்வி நிலையங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவை ஆதரித்த, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் கலவரம் மூண்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு, கல்வி நிலையங்கள் சாதி, மதங்கள் போன்ற வேறுபாடுகளை தேவையில்லை என்றும்,  ஹிஜாப் அணிவது கட்டாயம் என இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட வில்லை என்றதுடன்,  கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த உச்சநீதிமன்றத்தில், மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த மனு மீதான விசாரணை  கடந்த மாதம் பரபரப்பாக  நடைபெற்றது. கர்நாடக அரசு தரப்பிலும், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.  இந்த மனுக்களை விசாரித்தது.

கர்நாடக அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜாரகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அப்போது,  உடுப்பியில் உள்ள கல்லூரி  மாணவிகள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டே முடிவை எடுத்ததாவும், கல்வி நிலையங்களில், சீரூடை என்ற லிஸ்டில்,   ஹிஜாப் வராது என்பதால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர்.  ஆனால்,  சில அமைப்புகளின் தூண்டுதலால், சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர் என்று வாதிட்டார்.  10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில்  கடந்த மாதம் 22-ம் தேதி இறுதி  வாதங்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று  வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.