புதுடெல்லி:
காத்மா காந்தி பற்றி அவதூறாக பேசிய ராகுல்காந்தி வருத்தம் தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
மராட்டியத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில பேசிய ராகுல் காந்தி, ‘‘காந்திஜியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்தான்’’ என்று பேசினார்.
rajul-supreme
இதுகுறித்து, ஆர்.எஸ்.எஸ். செயலாளர்  ராஜேஷ் குந்தே   என்பவர் மாஜிஸ்திரேட்டு  கோர்ட்டில் ராகுல் காந்தி மீது குற்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். வழக்கில் அவர், தனது பேச்சின்மூலம்  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நற்பெயரைக் கெடுக்க முயற்சித்தார் என குற்றம் சாட்டி உள்ளார்.
விசாரணையில், நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அவரது மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்–முறையீடு செய்ய அனுமதி  வழங்கியது.  சுப்ரீம் கோர்ட்டு, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது சார்பில் ஆஜரான வக்கீலிடம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ‘‘ராகுல்காந்தி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தாரேயானால், இந்த வழக்கை முடித்து விடலாம்’’ என்றனர்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு யோசனையை ராகுல் காந்தி ஏற்கவில்லை.  சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப். நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தவறான வரலாற்று செய்தியை சொல்லி ராகுல் காந்தி ஏன் அவ்வாறு பேச வேண்டும்?’’ என கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கைப் பொருத்தமட்டில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு      499–ன் கீழ் வருகிறதா, இல்லையா என்பதைத்தான் நாங்கள் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. நீங்கள் வருத்தம் தெரிவிக்காத பட்சத்தில், வழக்கு விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என கூறினர். அத்துடன்,  சட்டத்தின் நோக்கம், மக்களை வழக்குதாரர்களாக மாற்றுவது அல்ல. சட்டத்தின் நோக்கம், மக்கள் அடிபணிவதுதான். பெருங்குழப்பத்தை விட அமைதியும், நல்லிணக்கமும்தான் மேலானது’ என்று கருத்து தெரிவித்தனர்.
ராகுல் காந்தி சார்பில் மூத்த வக்கீல் ஹரின் ராவல் ஆஜராகி, ‘‘ராகுல் காந்தி அரசு ஆவணங்கள், பஞ்சாப்–அரியானா ஐகோர்ட்டு முடிவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் பேசினார். அவர் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.சை குறிப்பிடவில்லை’’என வாதிட்டார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராகுல்காந்தி வருத்தம் தெரிவிக்காவிட்டால் வழக்கு விசாரணையை சந்தித்தேஆக வேண்டும் என்றனர். அடுத்த விசாரணை 27–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல்காந்தி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் ஆஜராவார் என தெரிகிறது.
குற்ற அவதூறு வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 2 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வழி சட்டத்தில் உள்ளது.