
டில்லி
வங்கிகள் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் விஜய்மல்லையா நேரில் வராமல் தண்டனை தர முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
விஜய் மல்லையா வங்கிகளில் ரூ 9000 கோடி கடன் வாங்கித் திருப்பித் தராததால் வங்கிகள் அவர் மீது வழக்குகள் தொடர்ந்தன. நீதி மன்றத்துக்கு வரச் சொல்லி பல சம்மன்கள அனுப்பப் பட்டன. அவர் ஒருமுறை கூட வரவில்லை. தவிர தற்போது சட்டவிரோதமாக நாட்டை விட்டு சென்று லண்டனில் வசித்து வருகிறார்
அவர் நீதி மன்றத்துக்கு வராததால் வங்கிகள் அவர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மல்லையா இல்லாமல் விசாரணை நடத்தவோ தண்டனை அளிக்கவோ முடியாது எனவும், அரசு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் கூறினர்.
அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியாக லண்டன் கோர்ட்டில் அவரை லண்டனை விட்டு வெளியேற்றுமாறு வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 4 க்குள் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
தண்டனையின் அளவைப் பற்றி முடிவு செய்ய தண்டனை பெற வேண்டியவர் நீதிமன்றத்தில் இருந்தாக வேண்டும் என்பது சட்டம் என சில சட்ட அறிஞர்கள் தெரிவித்தனர்
[youtube-feed feed=1]