டில்லி:

குஜராத்தில் நடைபெற்ற பட்டேல் இனத்துக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

இதை நிறுத்தி வைக்கக்கோரி, அவர் குஜராத் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உச்சநீதி மன்றமும் அவசர வழக்காக விசாரிக்க மறுத்து தெரிவித்து விட்டதால், அவர் தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் படேல் சமூகத்தினற்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக,  ஹர்திக் படேல் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு விஸ்நகர் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

தீரப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் தாக்கல் மனுவும், நிராகரிக்கப் பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தை நாடினார். மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, தேர்தலில் போட்டியிட வசதியாக 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனு செய்திருந்தார் . ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்யிட இருப்பதாகவும்,  வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 4 கடைசி நாள் என்பதால், மனுவை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால், அவரது மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக ஹர்திக் படேல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று தெரிகிறது

ஹர்திக் பட்டேல், கடந்த மார்ச் 12ம் தேத ; ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்னிலையில் ஹிர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.